Thursday, December 19, 2013

Friday, November 16, 2012

வெற்றுக்கிளை தழையும் மர நிழலில் ஒளிரும் சுடர்



கால நதியில் நானோர்
மலரும் நீர்க்குமிழ்

அந்தரம் பாயும் மீன்
தீராத வெறுமையின்
வசீகரம் நிரம்பிய
வெற்றுப் படகு
கேவல் அடங்காத
பின்னிரவில் எழும்பும் நீராவி
அடர் சலனம் பூத்த மோனச்சுழி
வற்றாத கூழாங்கற்களின் இசையில்
தன்னை இழைக்கும் மணல்.

Friday, November 4, 2011

பருகும் பொழுது

யாழ்முறிப் பண்...
சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை.

சுடர் குமைவு

வெறுமையின் உக்கிரம் கூடி
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை

Sunday, October 16, 2011

யாழ்முறிப் பண்

சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை

Thursday, June 2, 2011

கொழுத்த உன்

என் பிணந்தின்று
கொழுத்த உன்
மேதமையின் சாகசம்
விசும்பென நீள
வெயில் பாயா
அந்த வேம்பின் மடியில்
தின்ற மண்ணின் வாசம்
இன்னும் போகவில்லை
என்பதை மீதமிருக்கும்
மரணிக்கவியலா நமது காகமொன்று
தன் ஆழி நாவால்
அறிவிக்க எத்தனிக்கிறது.
சிறுவர்கள் இன்னும் விளையாடுகிறார்கள்
குளிர்கமழ் வேம்படியில் .

Monday, May 23, 2011

உன் சேய்மை

ஒரு சுடரைப் போல உன் சேய்மை
விரைந்து கவியும் ஒரு துளி இருள்
என் உனது உன்மத்த மரணம்
உன் நிலம் ஒரு ஒருதான் ...