Wednesday, June 24, 2009

அகாலன் கூற்று

உடல்விசும்புத் திரையொடுங்கும்
நீர் மலையுடல் மிதக்கும் நிணக்கடல்
கூழுண்ணும் பேய்கள்
மலைகளை அடுக்கின.


சருகுகளை நட்டு வளர்க்கும்

ஒரு பித்தன் சொன்னான்

அல்காலமென்று

Wednesday, June 17, 2009

கூகி வா தியாங்கோ

சமீபத்தில் படித்த புத்தகம் கூகி வா தியாங்கோவின் அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்
மிகச்சிறந்த நூல் .
காலனிய மனநிலை எவ்வாறு நம்முள்ளும் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது

காலனிய நுண் அரசியல் வடிவங்களையும் அதற்கான மாற்றுகளையும் முன்வைக்கிறார் .

என்னை மறந்தேன்

மவுனத்தின் நேசன்
தனிமையின் காதலன்
நிராசைகளின் குப்பைத்தொட்டி
அதியனின் கரங்களில்
தவழும் குழந்தை
அவ்வையின் கதை சொல்லி
சருகுகளை மீட்டும்
இசைஞன்
.......... யாழ் அதிய‌ன்