Thursday, March 18, 2010

நீர்க்குமிழியுடைத்து விளையாடும் காற்று

பைத்தியமாயிருப்பதே
ஃபேஷனாகி விட்டதால்
உங்களைப்போல் உடையணிந்துகொள்ளவும்
முயற்சிக்கிறேன்
இப்பொழுதெல்லாம்.

Monday, March 8, 2010

தன்னை இழக்கும் ருசி

குரூரத்தின் வன்ம விதைகளை
கருணை பொங்க‌
என்னுடல் வெளியில்
ஊடகனாய் விதைத்தாய்.
என்
கையறு வாழ்வில் உனக்கென்ன
கவலை.
நாம் சந்திக்கும் குறியிடங்களை
நீதான் தீர்மானிக்கிறாய்
எப்போதும்.
அது யந்திரோபாயமென்பதை
உணர்ந்ததில்லை யான்.
குறிப்புக்கு;
பெருமைதான் யெமக்கு அதில்.
ஒருபோதும் அல்லகுறியாவதில்லை
உனக்கு .

Monday, March 1, 2010

வதைவனம்

உன் பசப்புகளுக்கு

எனது கடல்

கட்டுண்டு மயங்கியது

ஒரு நிழலின்

அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது

மசமசக்கும் அறிகுறிகள்

புன்முறுவலாய் மாறுமா என்ன‌

Saturday, November 28, 2009

கவிதையும் பித‌ற்ற‌லும்

தீட்ட எளிதானவை மலர்கள்
கடினம் இலைகள்

சப்பானியக் கவிதை

மனிதர்களுக்கு மலர்கள்தான் தேவை.இலைகள் கிளைகள் மரம் வேர், நிலம், நீர், காற்று, தேவையில்லை.உள்ளம் சுருங்கி பொருளுக்கு அடிமையான‌ ம‌ன‌ம் வேரென்ன செய்யும்.விதையிலிருந்து மலர்கள் மட்டும் பூத்தால்போதும். நுகர்வுவெறியேறிய மனிதமனம் மலர்களைத்தான் நேசிக்கும்.ஆத‌லினால் தீட்ட‌ எளிதானவை மலர்கள்கடினம் இலைகள்.

Friday, August 28, 2009

மலர் தான்

இன்றைய பொழுது
நேற்றைப் போல
உதிர்ந்து போகும் வாடிய

மலர் தான்

Saturday, August 8, 2009

சதைகளின் காலம்

சதைகளைக் கண்டு

மோகித்து சதைகளை நுகர்ந்து கொன்று

சதைகளாய் அலைந்து மடியும்

மனச் சதை

சதை மனம் மடியும் காலம்

அண்மிக்குமா

இது சதைகளின் பொழுது

எங்கேனும் மனிதன் இருந்தால் சொல்

நிலவிடம்

பிறை வளரும்

Friday, July 3, 2009

தமிழ் மலை

நீர் வழிப்படூஉம் புனை போல..
அறவிலை வணிகன் ஆய் அலன்..
செம்புல‌ப் பெய‌ல் நீர் ..
உல‌குபுக‌த் திற‌ந்த‌ வாயில்.. விய‌த்த‌லும் இல‌மெ...
க‌ல்லைப் பிசைந்து க‌னியாக்கி நின்றானை..