மன நிலைபிறழ்ந்தவரிடமிருந்து
அன்பையும்
தொடர் அவமதிப்பிற்குப் பின்னும்
யாசகம் கேட்டு உண்டும் பசியடங்காது
ஒட்டுத்துணியின்றி மல்லாந்து
தன் அம்மாவுடன் உக்கிர வெயிலில்
எல்லாப் பிணக் கால்களும் செல்ல
நடைபாதையில் உயிர்ப்பாய் உறங்கும்
ஒரு பெண் குழந்தையிடமிருந்து
கனத்த ரவுத்திரத்தையும்
தாழ்வுமனத்தில் கனந்தோறும் பதறும்
ஒரு மண்வாசியிடமிருந்து
பெருங்காதலையும்
உயிர்கசியும் நேசத்தை
உன்கழிசடைத்தனம் மணக்க
உன்னால் இழிவுசெய்யப்படுகிற
மூன்றாம் பால் அன்பரிடமிருந்தும்
கனியும் தாய்மையை
உன்னால் குற்றவாளியெனச் சொல்லப்பட்டவரிடமிருந்தும்
பெற்றுத் தழைக்கும் அந்தக் கொடி
நிலத்தோடு படர்கிறது
அமுதம் தளும்பும் கடலென.
1 comment:
யாசித்தும் பெற வேண்டும் அன்பு
அனுபவம்தான் நம்மை ஆழ படுத்தும்
இன்னும் ஒருமுறை வாசிக்க வேண்டும்
கு.முத்துக்குமார்
Post a Comment