எனது இருப்பற்றதன் துயரமும் கழிவிரக்கம் கோரும்
வெறுமையும் தவிர
மகிழ்வானது உனக்கு
எதுவுமிராதென்பதையறிவேனென்ற போதும்
சொல்கிறாய்
நீ யென்னுயிரென்று...
தூக்கனாங்குருவிகள் மனிதருக்கு
அகப்படாத கிளைகளில்தான்
கூடுகட்டுமென்பதையறிவன மரங்கள் மட்டுமல்ல..
1 comment:
இயற்கையின் வாழ்வோடு தன் வாழ்வின் உண்மைகளை உணரச்செய்யும் இக்கவிதைக்குள் இரண்டு துயரமான இதயங்களின் உரையாடல்களைக் கேட்க முடிகின்றது. துயரமும் துயரமும் தான் சேரமுடியும்; இன்பமும் துயரமும் ஒருபோதும் இணையாது. கற்கோளுலகில் கனவுத் தைநீராடல்தான் சாத்தியம். துயரத்தை மகிழும் இதயத்தின் தேடலும், மறுப்புச் சொல்லமுடியாத உமது நிலையும் மனதைப் பிசைகின்றன. எந்தச் சக்தியாலும் தீண்டியழிக்க முடியாத தூக்கனாங்குருவிக்கூடாய் காதல் பாதுகாப்பாய் வாழட்டும். இருண்மையும் படிமமும் இதயத்தின் வலியோடு வெளிப்படும் மிக நல்ல கவிதை இது. உமது பயணம் தொடரட்டும்...
Post a Comment