Sunday, March 28, 2010

வலியைப் பருகும் அன்னம்

கனவும் நனவும்
முயங்கிடும் பொழுதாய்
நிலாக்கடல் போதவிழும்

புளிப்பேறிய களாப் பழமுண்டவன்
பாடியதென்னவோ
வேனிற்காலத்தில்
அரும்பும் வேப்பம்பூக்களின்
சுவையயைத்தான்
என்பதை அனுமானிக்க
நான்
சாகவேண்டியதாயிற்று.

1 comment:

கு.முத்துக்குமார் said...

யார் கவிதையைப் பற்றி விமர்சனம்..

வேனில் கால வேப்பம்பூ சுவை நல்ல உவமை . ஆனால் களாப பழ புளிப்புடன்

நிறைய எழுது ஜவஹர்