நிலவின் பாலொளியமுது பருகாதார் துயருடையோர் தான் எனும் படி பொங்கும் பேரெழில்.
இன்றைய நாளை தொல்காப்பியரின் பிறந்த நாள் என தமிழறிஞர்கள் முடிவுசெய்து விழா எடுக்கின்றனர். நல் முயற்சி.
பொய்யர்களுக்கும் புராணக்கதை மாந்தர்களுக்கும் வீண் பிறந்த நாள் கொண்டாடும் சூழலில் உலக அறிஞர்கள்
என்றும் வியக்கும் படி தமிழ் இலக்கண ,இலக்கிய, சமூக, வாழ்வியல் வளத்தை வெளிப்படுத்திய் முதல்
அறிஞர் இவரே என மொழி நூலார் வியந்து கூறுவர். அவருக்கு பிறந்த நாள் காணும் செயல் மிகச்சிறப்பு.
தமிழ் தழைக்கும் வழி தொல்காப்பியரின் நெறியில் நல் ஆய்வுகள் தேவை.
No comments:
Post a Comment